/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதார் மையத்தில் குழந்தையுடன் காத்திருப்பு
/
ஆதார் மையத்தில் குழந்தையுடன் காத்திருப்பு
ADDED : நவ 12, 2025 11:53 PM

காரைக்குடி: காரைக்குடி ஆதார் மையம் முன்பு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகாலை முதலே காத்துக் கிடக்கும் அவலம் நிலவுகிறது.
காரைக்குடியில் தாலுகா அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலக வளாகங்களில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் கார்டுதாரர்களின் தற்போதைய உண்மை நிலை அறியும் பொருட்டும், பயோ மெட்ரிக் உறுதி செய்யும் பொருட்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி தொடங்கி, வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, விவசாய பதிவு, அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என பலரும் தங்களது ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் மையத்தை நாடி வருகின்றனர். ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக உள்ளது.
சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் காலை 8:00 மணி முதலே ஆதார் மையம் முன்பு குழந்தைகளுடன் காத்துக் கிடக்கின்றனர்.

