/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டு குடிநீர் திட்ட கிணற்றை சுற்றி தேங்கியுள்ள கழிவு நீர்
/
கூட்டு குடிநீர் திட்ட கிணற்றை சுற்றி தேங்கியுள்ள கழிவு நீர்
கூட்டு குடிநீர் திட்ட கிணற்றை சுற்றி தேங்கியுள்ள கழிவு நீர்
கூட்டு குடிநீர் திட்ட கிணற்றை சுற்றி தேங்கியுள்ள கழிவு நீர்
ADDED : ஜூலை 17, 2025 11:29 PM
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணற்றை சுற்றிலும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு நிலவி வருகிறது.
திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து 1972 முதல் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு குடிநீர் திட்டம் செயல்படுகிறது.
இதற்காக வைகை ஆற்றில் திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நிரப்பி அருப்புக்கோட்டை நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. வறட்சி காலங்களில் நீரூற்று இல்லாததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
இதற்காக பத்து கோடி ரூபாய் செலவில் திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி எதிரே வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது.
இதன் மூலம் வைகை ஆற்றில் நீரோட்டம் உள்ள காலங்களில் தடுப்பணையில் தண்ணீர் நீண்ட காலத்திற்கு தேங்கி நிற்கும். அதன் மூலம் ஊற்றுகளில் தண்ணீர் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
ஆனால் வருடத்தில் அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரையே வைகை ஆற்றில் நீர்வரத்து இருக்கும் மற்ற காலங்களில் மதுரை நகரின் ஒட்டு மொத்த சாக்கடையும் வைகை ஆற்றில் வந்து அவைகள் தான் தடுப்பணையில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவு நீரில் நாணல்கள், கருவேல மரங்கள், புதர்கள் வளர்ந்துள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் ராமநாதபுர மாவட்ட தேவைக்கு பத்து நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் சாக்கடை நீர் அடித்து செல்லப்பட்டது.
ஆனால் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் மீண்டும் தடுப்பணையில் சாக்கடை நீர் நிரம்பி காணப்படுகிறது.
இதனால் அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணற்றில் துர்நாற்றத்துடன் நிறம் மாறி காட்சியளிக்கிறது.
அதிகாரிகள் கூறியதாவது, அருப்புக்கோட்டை நகராட்சியில் 87 ஆயிரத்து 722 பேர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது திருப்புவனம் வைகை ஆற்று தண்ணீர் தான்.
சாக்கடை நீர் கிணற்றை சுற்றி தேங்கி கிடப்பதால் குடிநீர் விநியோகமும் அடிக்கடி தடைபடுகிறது. பலமுறை பொதுப்பணித்துறையிடம் தடுப்பணையை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம், என்றார்.