/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் மழை கடைகளுக்குள் தண்ணீர்
/
சிங்கம்புணரியில் மழை கடைகளுக்குள் தண்ணீர்
ADDED : ஆக 06, 2025 09:06 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் 2 நாட்களாக லேசான மழை இருந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு சிங்கம்புணரி நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கன மழை பெய்தது. பள்ளி விட்டு வீடு சென்ற மாணவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
பேரூராட்சி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஏராளமான டூவீலர்கள் தண்ணீரில் மிதந்தன. முறையான மழைநீர் வடிகால் அமைக்கப்படாததாலும், ஏற்கனவே இருக்கும் வடிகால்களை சீரமைக்காததாலும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக வியாபாரிகள் புகார் கூறினர்.
* மழை காரணமாக காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அ.காளாப்பூர் பெரிய பாலம் அருகே ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டி அகற்றியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.