/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் திருக்கல்யாணம்
/
திருப்புத்துாரில் திருக்கல்யாணம்
ADDED : ஜூன் 05, 2025 01:15 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா மே31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. நேற்று காலை 7:00 மணிக்கு அம்பாள் ஆதித்திருத்தளிநாதர் கோயிலுக்கு புறப்பாடு ஆகி தவத்தில் அமர்ந்தார். சோமஸ்கந்தர் கோயிலுக்கு சென்று அம்மனை சமாதானப்படுத்தி அழைத்து வருதல் நடந்தது. ராஜகோபுரத்தின் கீழ் சுவாமி- அம்பாள் மாலை மாற்றுதல் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமியும் அம்பாளும் திருமண மண்டபம் எழுந்தருளினர்.
காலை 9:00 மணிக்கு ரமேஷ் குருக்கள், பாஸ்கர் குருக்கள் சிவாச்சார்யார்கள் யாக பூஜை நடத்தினர். காலை 10:10 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றி, திருப்பூட்டு நடந்தது. மணக்கோலத்தில் சுவாமி -அம்பாளை பக்தர்கள் தரிசித்தனர்.