/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
/
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
ADDED : டிச 24, 2024 04:38 AM
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிவகங்கையில் கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து 470 மனுக்கள் பெற்று உரிய துறையின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.
சாலை விபத்து, இயற்கை மரண நிவாரணம், சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு முதல், இரண்டாம் பரிசு தொகை, மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்திற்கான சான்று என பல்வேறு துறைகளின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.4.95 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் நபார்டு வங்கி சார்பில் திருநங்கைகளுக்கு நடமாடும் உணவு வாகனம் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, உதவி கமிஷனர் (தொழிலாளர் நலத்துறை) சதீஷ்குமார், ஆவின் பொது மேலாளர் ராஜசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட நபார்டு வளர்ச்சி மேலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.