ADDED : டிச 27, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: இடைக்காட்டூர் சர்ச்சில் தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் குடும்ப விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார் வரவேற்றார். தேவகோட்டை ராமநாதன் விழாவை துவக்கி வைத்து பேசினார்.
துாய்மைப் பணியாளர்களுக்கும் திரு இருதய இல்ல மாணவர் களுக்கும் தேவகோட்டை ரோட்டரி சங்க தலைவர் மதன் குமார், செயலாளர் அழகேசன், ரோட்டரி துணை ஆளுநர் ஜோசப் நலத்திட்ட உதவி வழங்கினார்.
தமிழ்நாடு மின்வாரிய முன்னாள் செயற்பொறியாளர் கணேசன் முன்னாள் தலைமையாசிரியர் மைக்கேல் சகாய அன்பு, நிறுவனத் தலைவர் சேவியர்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

