/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நரிக்குடி ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை வருமா
/
நரிக்குடி ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை வருமா
ADDED : அக் 19, 2025 09:17 PM
திருப்புவனம்: திருப்புவனம்-நரிக்குடி ரோட்டில் சாலையோரம் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் கோட்டையில் இருந்து நரிக்குடி ரோடு வழியாக நரிக்குடி, அருப்புக்கோட்டை, பழையனூர், கலியாந்தூர், அல்லிநகரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கிராமங்களில் இருந்து மதுரை நகருக்கு செல்லும் வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்தியே சென்று வருகின்றன. தினசரி ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இருசக்கர வாகனங்களில் இப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.
இப்பாதையின் இருபுறமும் பலசரக்கு கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், நகை கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். குறுகலான இச்சாலையில் பஸ்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டு வரும் நிலையில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் பஸ்களை இயக்கவே முடிவதில்லை.
மணிமந்திர விநாயகர் கோயில் அருகே கனரக வாகனங்கள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் ரயில்வே கேட் அருகே ஓரம் கட்டி நிறுத்த வேண்டியுள்ளது. வாகனங்கள் கடந்த பின்தான் வர முடியும், இச்சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலையை ஆக்கரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீதும் நட வ டிக்கை எடுப்பதில்லை.
நெருக்கடியில் செல்லும் வாகனங்கள் லேசாக உரசினாலே டிரைவரை கூட்டமாக சேர்ந்து கொண்டு தாக்குகின்றனர். இதனால் இச்சாலையில் டவுன் பஸ்களை இயக்க முடியாமல் தவிப்பிற்குள்ளாகின்றனர். திருப்புவனத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப சாலை கட்டமைப்புகள் அமைக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசலையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்காலிக தீர்வாக நரிக்குடி ரோட்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.