/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளம் சீரமைக்காததால் தொழிலாளர்கள் அவதி

ADDED : டிச 07, 2024 06:20 AM

மானாமதுரை: மானாமதுரை குலாலர் தெருவில் குண்டும்,குழியுமான ரோடால் மண்ணால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மானாமதுரை குலாலர் தெருவில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.
வரும் டிச. 13ம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை விழாவிற்காக தற்போது தொழிலாளர்கள் அகல் விளக்கு சரல் விளக்கு தேங்காய் முக விளக்கு சாமி முக விளக்கு என பல்வேறு வகையான கார்த்திகை விளக்குகளை தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ரோட்டை தோண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதே போன்று குலாலர் தெருவில் அனைத்து பகுதிகளிலும் போடப்பட்டுள்ள பேவர் பிளாக் ரோட்டையும் தோண்டியுள்ளதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் கார்த்திகை விளக்குகளை தயார் செய்யும் தொழிலாளர்கள் அங்கிருந்து விளக்குகள் மற்றும் மண்பாண்ட பொருட்களை கூட்டுறவு சங்கத்திற்கும் மற்ற இடங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.