/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலம் மெயின் அருவியில் எச்சரிக்கை சைரன் பொருத்தல்
/
குற்றாலம் மெயின் அருவியில் எச்சரிக்கை சைரன் பொருத்தல்
குற்றாலம் மெயின் அருவியில் எச்சரிக்கை சைரன் பொருத்தல்
குற்றாலம் மெயின் அருவியில் எச்சரிக்கை சைரன் பொருத்தல்
ADDED : மே 28, 2024 12:35 AM

குற்றாலம்: குற்றாலம் மெயின் அருவி, பெண்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, எச்சரிக்கும் வகையில் சைரன் பொருத்தப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் மிதமாக விழுந்த சாரல் மழை இல்லாத போதிலும், வெயில் தென்படவில்லை.
குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.
வழக்கம் போல பழைய குற்றாலத்தில், மாலை ௫.௩௦ மணிக்கு மேல், சுற்றுலா பயணியர்குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளில் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சைரன் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆண்கள் பகுதியில் ஏற்கனவே சைரன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, பெண்கள் குளிக்கும் பகுதியிலும் சைரன் பொருத்தப்பட்டது. சைரன் ஒலிக்கும் போது, அருவிப்பகுதியில் இருந்து மக்கள் உடனே வெளியேற அறிவுறுத்தப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.