/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலம் அருவிகளில் வௌ்ளப்பெருக்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
/
குற்றாலம் அருவிகளில் வௌ்ளப்பெருக்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் அருவிகளில் வௌ்ளப்பெருக்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் அருவிகளில் வௌ்ளப்பெருக்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
ADDED : ஜூலை 12, 2024 11:13 PM

குற்றாலம்:தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக போதிய சாரல் மழை இல்லாத போதிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்தது. நேற்று காலை சுள்ளென வெயில் அடித்தது. மதியம் 3 மணிக்கு மேல் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்ய துவங்கியது.
இதனால், தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிதமாகவே காணப்பட்டது. கூட்ட நெரிச்சலின்றி சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாலை ௬மணிக்கு மேல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.