/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
/
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
ADDED : ஆக 07, 2024 12:45 AM
குற்றாலம்:குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் குறைந்ததை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத நிலையிலும், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்தது. நேற்று முன்தினம் மாலை மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இரவு மெயினருவி, ஐந்தருவியில் சற்று தண்ணீர் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை அருவிகளில் தண்ணீர் சற்று குறைந்ததையடுத்து, மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றாலம், புலியருவியிலும் தண்ணீர் பரவலாக விழுந்தது.
தென்காசி, இலஞ்சி, குற்றாலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியது. s