/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
கடையநல்லுார் ஸ்ரீ நீலமணி நாதசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

ADDED : மே 01, 2025 01:38 AM

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ நீலமணி நாதசுவாமி கோவில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடையநல்லூரில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ நீலமணி நாத சுவாமி கோவில், 15ம் நுாற்றாண்டை சேர்ந்தது. சுவாமி திருப்பதி வெங்கடாசலபதியை போல காட்சி தருகிறார். இந்த கோவிலில் பிரம்மோத்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டாச்சார்யார் பாலகிருஷ்ணன் தலைமையில் விழா நடந்தது. பிரம்மோத்சவ விழா வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.
தினமும் கட்டளை மண்டக படிதாரர்கள் மூலம் விழா நடக்கிறது. சுவாமி தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். 7ம் தேதி மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம், பூம்பல்லக்கு, ரதவீதி பஜன் நடக்கிறது.
9ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:00க்குள் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் இரு நேரமும் யாகசாலை பூஜைகள், தினமும் சதுர்வேத பாகவத பாராயணங்கள், திவ்யப்பிரபந்தம் நடக்கிறது.
ஏற்பாடுகளை ஸ்ரீ நீலமணி சேவா சமிதி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.