/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
வயலுக்குள் புகுந்த அரசு பஸ்: பெண் பலி
/
வயலுக்குள் புகுந்த அரசு பஸ்: பெண் பலி
ADDED : ஜூன் 06, 2025 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:பாப்பாக்குடி அருகே அரசு டவுன் பஸ்சின் ஸ்டீரிங் ராடு திடீரென துண்டானதால், வயலுக்குள் புகுந்தது. இதில் பெண் பலியானார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து பாபநாசம் சென்ற அரசு டவுன் பஸ், நேற்று காலை இடைகால் பகுதியில் சென்றது. ஒரு திருப்பத்தில் ஸ்டீரிங் ராடு துண்டாகி, டிரைவர் முருகேசனின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர வயலுக்குள் புகுந்தது.
இதில் பஸ்சில் இருந்து விழுந்த அனந்தநாடார்பட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி, 43, படுகாயமடைந்தார். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு துாக்கி செல்லும் வழியில் அவர் இறந்தார். மேலும் மூன்று பயணியர் காயமடைந்தனர். பாப்பாகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.