/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
கீரை வாங்கியதில் மோசடி சுகாதார அலுவலர் ' சஸ்பெண்ட்'
/
கீரை வாங்கியதில் மோசடி சுகாதார அலுவலர் ' சஸ்பெண்ட்'
கீரை வாங்கியதில் மோசடி சுகாதார அலுவலர் ' சஸ்பெண்ட்'
கீரை வாங்கியதில் மோசடி சுகாதார அலுவலர் ' சஸ்பெண்ட்'
ADDED : மே 31, 2025 12:45 AM
தென்காசி : தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்க கீரை உள்ளிட்ட காய்கறிகள் ஒப்பந்தக்காரர்களால் பெறப்பட்டது. 2022 - -2023 காலகட்டத்தில் 30 ரூபாய்க்குள் வாங்க வேண்டிய ஒரு கிலோ கீரையை, 80 ரூபாய்க்கு வாங்கியதாக பில்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 6 லட்சத்து 59,893 ரூபாய் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீபத்மாவதி, மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தற்போது, திருவாரூர் அரசு மருத்துவமனை நிர்வாக அலுவலராக பணிபுரியும் ஸ்ரீபத்மாவதி, இன்று ஓய்வு பெற இருந்தார். அவர் மீது, 17பி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.