/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தான் படித்த பள்ளியில் புதிய கட்டடம் இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி திறப்பு

ADDED : நவ 23, 2025 02:05 AM

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம்.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் இஸ்ரோ விஞ்ஞானியும் ஆதித்யா- எல் 1 திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி.
தான் படித்த பள்ளிக்கு நன்றி செலுத்தும் வகையில் ரூ.8 லட்சம் நன்கொடை அளித்ததுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை நேற்று நிகர் ஷாஜி, கலெக்டர் கமல்கிஷோர் இணைந்து திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிகர் ஷாஜி கூறியதாவது: நான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாளாக இருந்தது. இதை நிறைவேற்ற உதவியது முதலமைச் சரின் நமக்கு நாமே' திட்டம் என்றார்.
இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து கூறுகையில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. அதன் பின் நிலவுக்கும் மனிதரை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையிலும் இஸ்ரோ பல பங்களிப்புகள் செய்து வருகிறது. இஸ்ரோ தற்போது மேம்பாட்டு நிலையிலிருந்து செயல்பாட்டு நிலைக்கு மாறியுள்ளது. எனவே ஒவ்வொரு திட்டத்தையும் பிழையில்லாமல் வெற்றிகரமாக முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது, என்றார்.