/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
செக் போஸ்டில் ஆள் பற்றாக்குறை; 'நிபா' கண்காணிப்பில் சிக்கல்
/
செக் போஸ்டில் ஆள் பற்றாக்குறை; 'நிபா' கண்காணிப்பில் சிக்கல்
செக் போஸ்டில் ஆள் பற்றாக்குறை; 'நிபா' கண்காணிப்பில் சிக்கல்
செக் போஸ்டில் ஆள் பற்றாக்குறை; 'நிபா' கண்காணிப்பில் சிக்கல்
UPDATED : செப் 21, 2024 06:08 AM
ADDED : செப் 21, 2024 12:49 AM

தென்காசி:தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நிபா வைரஸ் சோதனை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. சோதனையில் போலீசாரையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து ஒருவர் இறந்துள்ளார். கேரளத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என சோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை செக் போஸ்டில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. செப்., 17 முதல் செயல்படும் இச்சோதனை சாவடியில் மூன்று ஷிப்டுகளில் தலா ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் 3 தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் வாகனங்களை மறித்தால் லாரி உள்ளிட்ட வாகனங்கள் நிற்பதில்லை. எனவே மூன்று ஷிப்ட்களிலும் தலா இரண்டு போலீசார் வீதம் நியமித்தால் மட்டுமே சோதனையை முறையாக மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
பயணிகளுக்கு உடல் சூடு அறிய தெர்மல் சோதனை, ஆக்சிஸன் குறைவை அறிய பல்ஸ் ஆக்சிமீட்டர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் பிறதுறை ஊழியர்களை கூடுதலாக நியமித்தால் மட்டுமே சோதனை முறையாக நடக்கும் நிலையுள்ளது.