/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெண்கள் தங்குமிடத்தை கேன்டீனாக மாற்றலாமா? பாதுகாப்பில்லாததால் பாலியல் தொந்தரவு
/
பெண்கள் தங்குமிடத்தை கேன்டீனாக மாற்றலாமா? பாதுகாப்பில்லாததால் பாலியல் தொந்தரவு
பெண்கள் தங்குமிடத்தை கேன்டீனாக மாற்றலாமா? பாதுகாப்பில்லாததால் பாலியல் தொந்தரவு
பெண்கள் தங்குமிடத்தை கேன்டீனாக மாற்றலாமா? பாதுகாப்பில்லாததால் பாலியல் தொந்தரவு
ADDED : நவ 16, 2025 01:50 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு, போதிய வசதி இல்லாமல் இருந்தது.
ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., கல்யாணசுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியில், 4.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு கூடம், மருத்துவர்களுக்கான உணவகம், டயாலிசிஸ் பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. இது, 2024ல் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரால், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில், கீழ்தளத்தில் நோயாளிகளின் பெண் உறவினர்கள் காத்திருப்பு கூடம், டாக்டர்கள், செவிலியர்களுக்கு மட்டும் ஒரு அறை எனவும், மற்றொரு பகுதியில் நோயாளிகளின் ஆண் உறவினர்கள் காத்திருப்பு கூடம், டயாலிசிஸ் பிரிவு ஆகியவை உள்ளன.
ஆனால், கேன்டீன் என தனியாக அமைக்காமல், நோயாளிகளின் பெண் உறவினர்கள் காத்திருப்பு கூடத்தில் கேன்டீன் செயல்பட்டு வருகிறது.
இதனால், நோயாளிகளின் பெண் உறவினர்கள் தவித்து வருகின்றனர். தங்குமிட வசதி இல்லாததால், ஆண்கள் காத்திருப்பு கூடத்தில் தன் பெரியப்பாவுடன் படுத்திருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வாலிபர் ஒருவர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இது போன்ற சர்ச்சைகளை தவிர்க்க, மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளின் காத்திருப்பு கூடத்தில் உள்ள கேன்டீனை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

