/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தந்தையை அடித்து கொன்று நாடகமாடிய மகன் கைது
/
தந்தையை அடித்து கொன்று நாடகமாடிய மகன் கைது
ADDED : நவ 16, 2025 01:49 AM

தஞ்சாவூர்: தந்தையை அடித்து கொன்று நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இஞ்சிக் கொல்லையைச் சேர்ந்தவர் செல்வம், 70; ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். மனைவி இறந்து விட்டார்.
இவரது மகன் வெங்கடேசன், 32. இவரது மனைவியும், மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வெங்கடேசனின் மூன்று குழந்தைகள், சென்னையில் உறவினர் வீட்டில் உள்ளனர்.
இதனால், செல்வமும், வெங்கடேசனும் தனியாக வசித்தனர். மதுவுக்கு அடிமையான வெங்கடேசன், நேற்று முன்தினம் செல்வத்திடம் தகராறு செய்து, அவரது தலையில் தாக்கியதில், செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செல்வம் கீழே விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி, வெங்கடேசன் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
செல்வத்தின் சடலத்தை உறவினர்கள் குளிக்க வைத்த போது, உடலில் இருந்த காயத்தை கண்டு, நாச்சியார்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், செல்வத்தின் உடலை மீட்டு, வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்.

