/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்
/
பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்
ADDED : அக் 28, 2025 12:02 AM

தஞ்சாவூர்: பஸ் படியில் நின்று பயணித்த கல்லுாரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுார் அருகே பட்டவெளியை சேர்ந்தவர் இளம்பரிதி, 18; கும்பகோணம் அருகே தனியார் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர். நேற்று காலை கல்லுாரி செல்ல, சீர்காழியில் இருந்து கும்பகோணம் வந்த அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் அதிக கூட்டம் இருந்ததால், இளம்பரிதி மற்றும் சில மாணவர்கள், படியில் தொங்கியவாறு பயணித்தனர்.
அப்போது, கல்லுாரி பஸ் ஸ்டாப்பில், இளம்பரிதி வந்த அரசு பஸ், முன்புறம் நின்ற அரசு பஸ்சை முந்தியபோது, அந்த பஸ்சின் மீது உரசியதில், இளம்பரிதி, திருப்பனந்தாளை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் முகம்மது ரபீஸ், 15, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இளம்பரிதி உயிரிழந்தார். முகம்மது ரபீஸ் சிகிச்சை பெறுகிறார். சோழபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

