/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
நாச்சியார் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் கல் கருட சேவை
/
நாச்சியார் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் கல் கருட சேவை
நாச்சியார் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் கல் கருட சேவை
நாச்சியார் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் கல் கருட சேவை
ADDED : டிச 23, 2020 01:53 AM
தஞ்சாவூர்:நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில், பக்தர்கள் இன்றி கல் கருட சேவை நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில், கல்கருட பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில், ஆண்டுக்கு இருமுறை திருவிழாவின் போது, நான்காம் நாளில் பிரசித்தி பெற்ற கல் கருட சேவை நடக்கும்.இந்தாண்டு, கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
விழாவின் நான்காம் நாளான நேற்று முன்தினம், கல்கருட சேவை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, கோவில் மண்டபத்தில் எழுந்தருளும் கல் கருட சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளினர்.