/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'
/
மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'
ADDED : அக் 26, 2025 02:02 AM

மல்லிப்பட்டினம்: மாணவன் தற்கொலை வழக்கில், அவரை தற்கொலைக்கு துாண்டியஅரசு பள்ளி ஆசிரியர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனையை சேர்ந்தவர் விஷ்ணு, 20; மதுரை அண்ணா பல்கலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்தார். இவர், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் விஷ்ணு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சேதுபாவாசத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். தன் இறப்பு காரணம், பாபு என்ற பெயரை பள்ளி சுவரில் எழுதி வைத்திருந்தார்.
விசாரணையில், பாபு, 40, அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருவதும், இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்ததும் தெரியவந்தது. சேதுபாவாசத்திரம் போலீசார் பாபு மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

