/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
நிச்சயதார்த்தத்தை மறைத்த காதலியை கொன்ற காதலன்
/
நிச்சயதார்த்தத்தை மறைத்த காதலியை கொன்ற காதலன்
ADDED : நவ 27, 2025 11:55 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மேலகளக்குடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகள் காவியா, 26. இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அதே ஊரை சேர்ந்த அஜித்குமார், 29, பெயின்டர். காவியாவும், அஜித்குமாரும், 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் தான் என்றாலும், காவியாவின் பெற்றோருக்கு, திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை.
இதையடுத்து, காவியாவை அவரது பெற்றோர் வற்புறுத்தி, உறவுக்கார பையனுக்கு திருமணம் செய்து வைக்க, கடந்த நவ., 23ம் தேதி, நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த விவரத்தை காவியா, அஜித்குமாரிடம் மறைத்து விட்டு, வழக்கம் போல பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு காவியா அனுப்பினார்.
இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமார் நேற்று காலை, பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்ற காவியாவை கொத்தட்டை காலனி பகுதியில் வழிமறித்து, நிச்சயதார்த்தம் ஆனதை ஏன் கூறவில்லை என கூறி வாக்குவாதம் செய்தார்.
இதில், ஆத்திரமடைந்த அஜித்குமார் அரிவாளால், காவியாவின் தலையில் வெட்டினார்.
இதில், காவியா உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

