/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தியாகராஜர் ஆராதனை விழா; அஞ்சல் அட்டைகள் வெளியீடு
/
தியாகராஜர் ஆராதனை விழா; அஞ்சல் அட்டைகள் வெளியீடு
ADDED : ஜன 16, 2025 12:28 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் 178வது ஆராதனை விழா நேற்று முன்தினம் துவங்கி நாளை மறுதினம் வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
தியாகராஜரை போற்றும் வகையில், தியாகராஜ சுவாமிகள் இசை அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்களின் படங்களை கொண்ட, 'எந்தரோ மகானுபாவுலு' என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டை தொகுப்பை, திருச்சி மத்திய அஞ்சல் மண்டல தலைவர் நிர்மலா தேவி வெளியிட்டார்.
இதை, ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்சவ சபையின் தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.
நிர்மலா தேவி கூறியதாவது:
தியாகராஜரின் ஆராதனை விழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் அட்டை தொகுப்பில், 23 அஞ்சல் அட்டைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு தபால் தலை அட்டையிலும் இசை மேதைகள், தியாகராஜரிடம் கொண்டுள்ள துாய பக்தியை சித்தரிக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த அஞ்சல் அட்டை தொகுப்பு சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் இசை தான் உச்சத்தை அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 350 ரூபாய். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

