sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஊழலின் ஆணிவேரை அகற்றுங்கள் மக்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

/

ஊழலின் ஆணிவேரை அகற்றுங்கள் மக்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

ஊழலின் ஆணிவேரை அகற்றுங்கள் மக்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

ஊழலின் ஆணிவேரை அகற்றுங்கள் மக்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்


ADDED : அக் 05, 2011 11:51 PM

Google News

ADDED : அக் 05, 2011 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : ஊழலின் ஆணிவேரை அகற்றுங்கள், அப்படி அகற்றினால் மட்டுமே, ஊழல்வாதிகள் அச்சப்படுவார்கள் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தேனி, போடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதின் சுருக்கம்: 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர்கள் இன்னமும் ரோடு அமைத்து தருகிறேன்.

குடிநீர் சப்ளை செய்கிறேன் என வாக்குறுதி கொடுக்கின்றனர். இவ்வளவு நாளும் மக்களுக்கு என்ன செய்தார்கள். உள்ளாட்சி என்பது உங்கள் ஆட்சி. இதில் அரசியல் பேதம் பார்க்காமல் நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். உங்களின் வாழ்வாதார உரிமைகள் என்ன என்பது உங்களுக்கு தெரியும். மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்குகின்றன. உள்ளூர் வரிவருவாயும் வருகிறது. ஊழல் காரணமாக உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரழிந்து கிடக்கின்றன. இதனால் நாம் 30 ஆண்டுகளாக ரோடு கூட இல்லாமல் தடுக்கி விழுகிறோம். ஊழலை ஒழிக்க அதன் ஆணிவேரை அழிக்க வேண்டும். மக்கள் ஊழல் ஆணிவேரை அகற்றினால் ஊழல்வாதிகள் அச்சப்படுவார்கள். என் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் நான் கடும் நடவடிக்கை எடுப்பேன். ஒரே ஆண்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பார்கள். ஐந்து ஆண்டில் ஊரை நல்ல முறையில் மாற்றிக்காட்டியிருப்பார்கள். நான் அவர்களை வழிநடத்தி செல்வதால் இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.






      Dinamalar
      Follow us