/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் வரி செலுத்தாத குழாய் இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சிகளில் நிலுவை தொகை வசூலிக்க நடவடிக்கை
/
குடிநீர் வரி செலுத்தாத குழாய் இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சிகளில் நிலுவை தொகை வசூலிக்க நடவடிக்கை
குடிநீர் வரி செலுத்தாத குழாய் இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சிகளில் நிலுவை தொகை வசூலிக்க நடவடிக்கை
குடிநீர் வரி செலுத்தாத குழாய் இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சிகளில் நிலுவை தொகை வசூலிக்க நடவடிக்கை
ADDED : பிப் 26, 2025 06:09 AM
கம்பம்: நகராட்சிகளில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை துவங்கியது. நிலுவை தொகை வசூலிக்கும் நடவடிக்கை அனைத்து நகராட்சிகளிலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் தேனி, கம்பம், போடி, சின்னமனூர், பெரியகுளம், கூடலூர் என ஆறு நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் சொத்து வரி, குத்தகை இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பொதுநிதியாக வைக்கப்படும்.
குடிநீர் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் தனி கணக்கில் வைக்கப்பட்டு, குடிநீர் பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தப்படும், குடிநீர் வரி கம்பம் நகராட்சியில் குடியிருப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.273 ம், வர்த்தக இணைப்புகளுக்கு ரூ. 2000 ம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆண்டிற்கு 4 முறை கட்டணம் செலுத்த வேண்டும்.
கம்பம் நகராட்சியில் 12 ஆயிரம் இணைப்புகள் வரை உள்ளது. குடிநீர் கட்டணம் மூலம் ஆண்டிற்கு ஒரு கோடியே 40 லட்சம் வருவாய் கிடைக்கிறது. ஆனால் குடிநீர் வரி பாக்கி ரூ.33 லட்சம் நிலுவை உள்ளது. சொத்து வரியை வசூல் செய்பவர்கள் - குடிநீர் கட்டணத்தை வசூல் செய்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கம்பம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் குடிநீர் கட்டணம் நிலுவை பல லட்ச ரூபாய் நிலுவை உள்ளது.
இது தொடர்பாக மண்டல இயக்குநர் நகராட்சி கமிஷனர்களை அழைத்து ஆய்வு கூட்டத்தில் கடுமையாக எச்சரித்துள்ளார். அதன்பேரில் வரி இனங்களை கடந்த சில வாரங்களாகவே ஒட்டுமொத்த ஊழியர்களும் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் குடிநீர் கட்டண நிலுவை குறையவில்லை. எனவே, குடிநீர் இணைப்புக்களை துண்டிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் குடிநீர் கட்டணம் நிலுவை தொகையை செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை துவங்கி உள்ளனர்.
இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி பெரிய அளவில் பாக்கி வைத்து இருப்பவர்களின் வீடுகளில் வேறு வழியின்றி குடிநீர் இணைப்பை துண்டிக்க துவங்கி உள்ளோம் என்றனர். அதிகாரிகளின் இந்த கறார் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.