ADDED : ஆக 15, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : டி.பொம்மிநாயக்கன்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இங்கு இரண்டு தளங்களுடன் கூடிய நான்கு வகுப்பறை கட்டிடங்கள் ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. துவக்க விழாவில் தேனி கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ., மகாராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். திம்மரசநாயக்கனூர் ஊராட்சி தலைவர் அட்சயா, ஊர் நாட்டாமை ராம்குமார் வரவேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.