/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இளநீர், தர்ப்பூசணி விற்பனை 'ஜோர்'
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இளநீர், தர்ப்பூசணி விற்பனை 'ஜோர்'
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இளநீர், தர்ப்பூசணி விற்பனை 'ஜோர்'
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இளநீர், தர்ப்பூசணி விற்பனை 'ஜோர்'
ADDED : பிப் 26, 2025 06:08 AM
கம்பம்: மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெயிலை சமாளிக்க மக்கள் இளநீர், தர்ப்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் விற்பனை களை கட்டி வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச் முதல் மே வரை கோடை காலமாகும். இந்தாண்டு பிப்ரவரி மூன்றாவது வாரமே கோடை காலம் துவங்கியது போல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பம் கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையங்களும் உறுதி செய்து அறிவித்துள்ளன. ஆனால் வெயிலின் தாக்கம் இந்த அளவிற்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது.
இதனால் குளிர்பானங்கள், மோர், கம்மங்கூழ், இளநீர், தர்ப்பூசணி பழங்களின் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பதால் இளநீர், தர்ப்பூசணி பழங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தோட்டங்களில் இளநீர் இல்லாததால், வியாபாரிகள் திண்டாடுகின்றனர். தர்ப்பூசணி பழங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து லாரிகளில் வரத் துவங்கி உள்ளது. மார்ச் துவங்குவதற்கு முன்னமே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், விற்பனை ஜோராக உள்ளது. 3 மாதங்களுக்கு குளிபர்பானங்கள் விற்பனை நீடிக்கும் என்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஆங்காங்கே குடிசை அமைத்து தர்ப்பூசணி பழங்கள் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது.