/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை பல்கலை பொது மருத்துவ முகாம்
/
கால்நடை பல்கலை பொது மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 19, 2024 05:00 AM
தேனி : தேனி கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில், தப்புக்குண்டு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் துவங்கியது.
பல்கலை டீன் ரிச்சர்ட் ஜெகதீசன் முகாமை துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் டாக்டர் மகேஸ்வரி வரவேற்றார்.
கால்நடை விரிவாக்க துறையின் தலைவர் டாக்டர் செந்தில்குமார், சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் மேதை பேசினர். கால்நடை பல்கலை மாணவ, மாணவிகள் விவசாயிகளிடம் விபரங்களை சேகரித்தனர்.
இன்று (ஜூன் 19ல்) வீரபாண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் தலைமையில் பொது மருத்துவ முகாம், ஜூன் 20ல் இலவச கண் பரிசோதனை முகாம், ஜூன் 21ல் பல்கலை வளாகம், தப்புக்குண்டு பகுதிகளில் துாய்மை பணி, ஜூன் 22ல் கால்நடை மருத்துவ முகாம், மற்றும் கருத்தரங்கு மரக்கன்று நடுதல், முகாம் நடக்க உள்ளது.