/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேறு திருமணம் செய்வதாக மிரட்டிய ராணுவ வீரர் மீது வழக்கு
/
வேறு திருமணம் செய்வதாக மிரட்டிய ராணுவ வீரர் மீது வழக்கு
வேறு திருமணம் செய்வதாக மிரட்டிய ராணுவ வீரர் மீது வழக்கு
வேறு திருமணம் செய்வதாக மிரட்டிய ராணுவ வீரர் மீது வழக்கு
ADDED : மே 01, 2024 08:04 AM
பெரியகுளம் : திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி விவகாரத்து கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ராணுவ வீரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சிந்தியா 22. தேனி அருகே உப்புக்கோட்டை பாலார்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன் மகன் வெள்ளையத்தேவன் 25. இருவரும் சின்னமனூர் தனியார் கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன் சிந்தியா உடற்கல்வி ஆசிரியை படிப்பு படிக்கும் போது, அதே கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த வெள்ளையத்தேவனும் நண்பர்களாக பழகினர். 2019 ஜூலை 27ல் வெள்ளையத்தேவன் ராணுவத்தில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர். 2022 டிச 14 ல் விடுமுறைக்கு வந்த வெள்ளையத்தேவன், பெரியகுளம் வீச்சு கருப்பணசுவாமி கோயிலில் சிந்தியாவை திருமணம் செய்தார். ஒரு வாரம் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினர். 3 மாதம் கழித்து விடுமுறைக்கு வரும் போது பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி பணிக்கு திரும்பினார். கடந்த ஜூலையில், தனக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக வெள்ளையத்தேவன் சிந்தியாவிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளார். அதற்கு சிந்தியா,'தன்னை திருமணம் செய்து விட்டு தற்போது வேறு திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கை என்னாவது', என கேட்டுள்ளார். அதற்கு வெள்ளையத்தேவன் ஜாதியை சொல்லி உன்னை என் வீட்டில் ஏற்க மறுக்கின்றனர். எனவே, நீயாகவே விவகாரத்து கொடுத்து விடு இல்லை என்றால் உன்னையும்,குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம். சிந்தியா புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, வெள்ளையத்தேவன் மீது எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.