/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிமீறிய 47 கடைகள் மீது நடவடிக்கை
/
விதிமீறிய 47 கடைகள் மீது நடவடிக்கை
ADDED : ஆக 16, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அமலாக்கபிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷியாம் ஷங்கர் தலைமையில் துணை ஆய்வர், உதவி ஆய்வாளர்கள் கடைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 61 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 47 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.