/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முற்றுகை: 126 ஆசிரியர்கள் கைது அரசாணை 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்
/
முற்றுகை: 126 ஆசிரியர்கள் கைது அரசாணை 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்
முற்றுகை: 126 ஆசிரியர்கள் கைது அரசாணை 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்
முற்றுகை: 126 ஆசிரியர்கள் கைது அரசாணை 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2024 02:04 AM

தேனி: அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி 'டிட்டோஜாக்' அமைப்பினர் தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 126 ஆசிரியர்கள் கைது செய்தனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து அல்லிநகரத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாநில முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற பணிநிரவல், மாற்றுப்பணி ஆணைகளை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணமுத்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் ராஜவேல் முன்னிலை வகித்தனர். ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்லத்துரை, மாநில செயலாளர் கிருஷ்ணசாமி, துணைப்பொதுச்செயலாளர் ராஜன், கள்ளர் ஆரம்ப பள்ளிகள் மாவட்ட தலைவர் முருகன், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமி வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 126 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் 368 ஆசிரியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது.