/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி
ADDED : ஆக 10, 2024 06:42 AM

தேனி : தேனி கோடாங்கிபட்டி பூர்ண வித்யா பவன் சி.பி.எஸ்.இ., சீனியர் செகன்டரி பள்ளியில், மதுரை சகோதயா சார்பில் மாவட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது.
12 பள்ளிகளில் இருந்து 27 குழுக்கள் பங்கேற்றன. போட்டிகளை பள்ளி தலைவர் முத்துகோவிந்தன், பொருளாளர் முரளிதரன், செயலாளர் கிருத்திகாபாபு துவக்கி வைத்தனர். ஜி.டி., பப்ளிக் பள்ளி துணை முதல்வர் அன்பழகன் பார்வையாளராக பங்கேற்றார்.12 வயது மாணவர் பிரிவில் தேனி வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதலிடம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பப்ளிக் பள்ளி 2ம் இடம் பெற்றது.
14 வயது மாணவர் பிரிவில் தேனி வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதலிடம். பூர்ணா வித்யாபவன் சி.பி.எஸ்.இ., பள்ளி 2ம் இடம் பெற்றது. 17 வயது மாணவர் பிரிவில் பூர்ண வித்யா பவன் பள்ளி முதலிடம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பப்ளிக் பள்ளி 2ம் இடம் பெற்றது. 19 வயது மாணவர் பிரிவில்எஸ்.சி.ஐ.எஸ்.எம்., பப்ளிக் பள்ளி முதலிடம். ரோஸி வித்யாலயா பள்ளி 2ம் இடம் பெற்றது.
பரிசளிப்பு விழாவில் பள்ளி நிர்வாக இயக்குனர்கள் ரேணுகாதேவி, குமார், அரவிந்தன், ஷியாம், விவேதா, ஹர்ஷவர்தன், சரண் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
சீனியர் முதல்வர் சுபாஈஸ்வரி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஹேமா கண்ணகி ராணி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சுரேஷ் போட்டிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.