/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வணிக வளாக கடைகள் ஏலம் விடாததால் தேவாரம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு
/
வணிக வளாக கடைகள் ஏலம் விடாததால் தேவாரம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு
வணிக வளாக கடைகள் ஏலம் விடாததால் தேவாரம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு
வணிக வளாக கடைகள் ஏலம் விடாததால் தேவாரம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:14 AM

தேவாரம் : தேவாரம் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடாததால் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் பேரூராட்சிக்கு ரூ.பல லட்சம் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
போடி, கம்பம் செல்லும் ரோட்டில் தேவாரம் பஸ் ஸ்டாண்ட் அமைந்து உள்ளது. தேவாரத்தில் இருந்து கம்பம், போடி, உத்தமபாளையம் மார்க்கமாக 5 பஸ்களும், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம் மார்க்கமாக 20 பஸ்களும் சென்று வருகின்றன. தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.2 கோடி செலவில் 18 வணிக வளாகக் கடைகள், சுகாதார வளாகங்களுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டது. பல மாதங்களாக திறப்பு விழா காணாமல் இருந்தது. தினமலர் செய்தியின் எதிரொலியால் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் ஏலம் விடாததால் பல மாதங்களாக பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது.
வணிக வளாக கடைகளை ஏலம் விட பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பயன்பாடு இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். பேரூராட்சிக்கு வருமானம் கிடைக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட வணிக வளாக கடைகளை ஏலம் விட தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.