/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.ம.மு.க., அ.தி.மு.க., நா.த.க., ஓட்டுக்களை விட தி.மு.க., 46 ஆயிரம் ஓட்டுகள் அதிகம்

ADDED : ஜூன் 09, 2024 03:46 AM
கம்பம், : லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அ.ம.மு.க., அ.தி.மு.க. நா.த.க. கட்சிகள் பெற்ற ஒட்டுக்களை விட 46 ஆயிரம் ஒட்டுக்கள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
தேனி தொகுதியில் பா.ஜ.. அ.ம.மு.க. , எஸ்.டி.பி.ஐ.. கூட்டணி வேட்பாளராக அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் களம் இறங்கினார். இவர் போட்டியிட்டதால் தேனி ஸ்டார் தொகுதி அந்தஸ்து பெற்றது.
தி.மு.க. சார்பில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க. சார்பில் நாராயணசாமி , நா.த.க. சார்பில் மதன் போட்டியிட்டனர்.
அ.ம.மு.க விற்கும், தி.மு.க.- விற்கும் இடையே தான் போட்டி என்ற நிலை ஏற்பட்டது.
தி.மு.க. தங்க தமிழ்செல்வன் 5,71,493 ஒட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்து தினகரன் 2,92,668 ஓட்டுக்களும், அ.தி.மு.க. நாராயணசாமி 1,55,587, நா.த.க. மதன் 76,834 ஒட்டுக்கள் பெற்றுள்ளனர்.
மூன்று வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் 5,25,089 ஆகும். இந்த மூன்று வேட்பாளர்கள் வாங்கிய ஒட்டுக்களை விட 46,404 ஒட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளர் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.