/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் விழிப்புணர்வுக்காக டபுள் டெக்கர் பஸ் தயார்
/
தேர்தல் விழிப்புணர்வுக்காக டபுள் டெக்கர் பஸ் தயார்
தேர்தல் விழிப்புணர்வுக்காக டபுள் டெக்கர் பஸ் தயார்
தேர்தல் விழிப்புணர்வுக்காக டபுள் டெக்கர் பஸ் தயார்
ADDED : ஏப் 11, 2024 06:37 AM

மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ' டபுள் டெக்கர்' பஸ், கால்பந்தாட்ட போட்டி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் லோக்சபா தேர்தல் ஏப்.26ல் நடக்கிறது. நூறு சதவிதம் ஓட்டு பதிவு என்ற லட்சியத்தோடு தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. அதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இடுக்கி லோக்சபா தொகுதியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில்' டபுள் டெக்கர்' பஸ் சேவை, கால்பந்தாட்டம் போட்டி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மூணாறில் தனியார் தேயிலை கம்பெனிக்குச் சொந்தமான மைதானத்தில் நாளை (ஏப்.12) மாலை 4:00 மணிக்கு ' டஸ்கர் ஷீல்டு' என்ற பெயரில் நடக்கும் கால்பந்தாட்டப் போட்டியில் கே.டி.எச்.பி. கம்பெனி அணியும், இடுக்கி மாவட்ட போலீஸ் அணியும் மோதுகின்றன. கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னதாக' டபுள் டெக்டர்' பஸ் சேவை துவக்கி வைக்கப்படும். இரண்டு நிகழ்ச்சியையும் பிரபல கால்பந்தாட்ட வீரர் விஜயன் துவக்கி வைக்கிறார்.
இடுக்கியில் எத்தனை நாட்கள் பஸ் இயக்கப்படும், பொதுமக்கள் பஸ்சில் பயணம் செய்வதற்கான வசதிகள் ஆகியவை குறித்து பஸ் சேவை துவக்கி வைத்த பிறகு தெரிவிக்கப்படும், என கலெக்டர் ஷீபா ஜார்ஜ் தெரிவித்தார்.

