ADDED : ஆக 25, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் சர்வதேச வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் தலைமை வகித்தனர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். ஜப்பான் டோக்கியோ மைக்ரோசாப்ட் நிறுவன மூத்த உற்பத்தி மேலாளர் விக்னேஷ் மிட்ஸ்மி, ஐரோப்பா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொறியாளர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள், ஏ.ஐ., தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை பெறுவது பற்றி கூறினார். முதல்வர் மதளை சுந்தரம், பேராசிரியர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.