/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தக்கை பூண்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
/
தக்கை பூண்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 05, 2024 05:09 AM

போடி : இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு செடி வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சாகுபடியில் விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்தினர். இதனால் நிலங்களில் மண்ணின் தன்மை குறைந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் விவசாய பயிர்களின் வளர்ச்சி குறைந்தது. தற்போது மண்ணின் தன்மையை வளப்படுத்தும் வகையில் இயற்கை உரங்களுக்கு மாறி வருகின்றனர்.
போடி அருகே சடையால்பட்டி, காமராஜபுரம், அம்மாபட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை உரங்களை பயன் படுத்தும் வகையில் தக்கை பூண்டு விதைகளை தூவி வளர்த்து வருகின்றனர்.
2 மாதங்களில் நன்கு வளர்ந்த நிலையில் தக்கைப் பூண்டு செடிகளை உழுது அதே நிலத்தில் உரமாக பயன்படுத்தி வருகின்றனர். சூரிய ஒளி மூலம் செடிகளின் வேருக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்தும் கிடைத்து வருகிறது.
மண்ணின் தன்மை மாறாமல் மண்புழுக்கள் இறக்காமல், உரமாகவும், தளைச் சத்தாகவும் பயன்படுகிறது.
இதோடு கால்நடைகளுக்கு நல்ல சத்தான தீவனமாக பயன்படுகின்றன. இதனால் விவசாயிகள் தற்போது தக்கை பூண்டு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.