ADDED : ஏப் 27, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேக்கம்பட்டி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் 48, குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். நேற்று முன் தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் வேஷ்டி காலில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் தூக்கி பார்த்த போது மூச்சின்றி இருந்தார். ஆட்டோவில் ஏற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கி கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முருகனின் அக்கா ராமுத்தாய் புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

