/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கி பரிவர்த்தனை செய்வோர் கண்காணிப்பு; தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கை

ADDED : மார் 30, 2024 04:25 AM
லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. நாளாக நாளாக பணப் புழக்கம் அதிகரித்து வருகிறது. பறக்கும் படை, நிலைக் குழு இருந்த போதும், வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பாளர்களின் பிரசாரங்களின் போது பணப்பட்டுவாடா ஒளிவு மறைவின்றி நடக்கிறது.
எனவே பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.
வருமான வரித் துறையினர் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் தினமும் கண்காணித்து வருகின்றனர்.
டெபாசிட் செய்வோர், பணம் எடுப்பவர் போன்றவற்றில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர்.
மேலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்த சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
காமயகவுண்டன்பட்டியில் கர்ணன் என்பவர் வீட்டில் மார்ச் 28 மாலை 4: 00 மணிக்கு நுழைந்த 16 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் தொடர்ந்த 13 மணி நேரம் சோதனை நடத்தி உள்ளனர்.
பணம் அல்லது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது பற்றி தெரிவிக்க வருமான வரி துறை மறுத்து விட்டது.
இது போன்று மேலும் பல இடங்களில் சோதனை நடக்கும் என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
கர்ணன் வீட்டில் நடந்த சோதனையை தொடர்ந்து அரசியல் புள்ளிகள் பலர் உஷார் அடைந்துள்ளனர்.
வேட்பாளர்கள், வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் கண்காணிக்கப்படுகிறது. வருமான வரித்துறையினரின் கூர்ந்து நோக்கப்படும் நபர்களிடம் எந்த நேரமும் வருமான வரி சோதனை நடத்தப்படலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.