/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய் துறையில் 16 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க உத்தரவு
/
வருவாய் துறையில் 16 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க உத்தரவு
வருவாய் துறையில் 16 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க உத்தரவு
வருவாய் துறையில் 16 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 07, 2024 06:41 AM
தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் ஆன்லைன் மூலம் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சில தாலுகாக்களில் விண்ணப்பத்துடன் உரிய சான்றிழ்கள் இருந்தாலும் தள்ளுபடி செய்வது, மனுக்களை நீண்ட நாட்கள் கிடப்பில் வைப்பது, மனுதாரர்களை அலைகலைப்பு செய்வதும், விண்ணப்பதாரர்கள் உரிய அலுவலங்களுக்கு நேரில் சென்று கவனிப்பிற்கு பிறகு சில சான்றிதழ்கள் பெறும் நிலை உள்ளது. பெரும்பாலும் பட்டாவில் பெயர் மாறுதல், கூட்டுப்பட்டாக்களில் இந்த நிலை இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு பொதுமக்களுக்கு 16 நாட்களில் தீர்வு கண்டு, சான்றிதழ்கள் கிடைப்பதை உறுதி செய்யவும்,
இப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கு சப்- கலெக்டர் நிலையிலான அதிகாரிகள், அவர்களுக்கு உதவியாக பிற தாலுகாவைச் சேர்ந்த துணைதாசில்தார் நிலையிலான அலுவலர்களை பணியமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இப்பணியினை மேற்கொள்ள தாலுகா வாரியாக அலுவலர்களை நியமித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். தேனி தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, பெரியகுளம் தாலுகாவிற்கு ஆர்.டி.ஓ., முத்துமாதவன், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், போடி தாலுகாவிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, உத்தமபாளையம் தாலுகாவிற்கு ஆர்.டி.ஓ., தாட்சாயணி ஆகியோரும் 5 துணைதாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் 16 நாட்களுக்குள் சான்றிதழ்கள் வழங்கவும், நீண்ட நாள் நிலுவையில் இல்லாததை உறுதி செய்யவும், காரணமின்றி தள்ளுபடி செய்வதை குறைத்திட சப்-கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் வரிசை அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு செய்ப்படுவதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.