/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
/
பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
ADDED : மே 03, 2024 06:12 AM

போடி: போடி அருகே பத்திரகாளிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர்.
போடி அருகே பத்திரகாளிபுரத்தில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடைபெறும். தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து பத்திரகாளிம்மனை தரிசித்து செல்வர். காவடி, தீச்சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடனை செலுத்து வருகின்றனர். பலர் உருண்டு கொடுப்பதோடு, அலகு குத்தி வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து கிடா வெட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.