/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு : டூவீலர்கள் சேதம்
/
பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு : டூவீலர்கள் சேதம்
ADDED : ஏப் 25, 2024 04:33 AM

போடி, : போடியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 டூவீலர்கள் எரிந்து சேதமானது.
போடி டி.வி.கே.கே., நகர் செல்லாயி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானசுந்தர் 26. இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தெருவில் நின்று தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் மதன்குமாரின் சித்தி மகன் வீரராஜ் இதை தட்டி கேட்டுள்ளார்.
ஆத்திரம் அடைந்த ஞானசுந்தர் கல்லை எடுத்து வீரராஜில் தலையில் அடித்து காயப்படுத்தி,கொலை மிரட்டல் விடுத்தார்.
விலக்க சென்ற மதன்குமார், பாண்டியன், சேதுராம், திவாகரையும் தாக்கி, தப்பி ஓடினார். காயம் அடைந்த வீரராஜை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக மதன்குமார் உடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் மதன்குமார்,சேதுரம், கார்த்திக் ஆகியோர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்து இருந்த டூவீலர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் தீ பற்றி எரிந்தது.
இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து சத்தம் போட்டுள்ளனர். மதன்குமார் டூவீலர் முழுதும் எரிந்து சேதமானது. அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பார்த்ததில் அடையாளம் தெரியாத இருவர் நள்ளிரவு 12.10 மணி அளவில் டூவீலரில் வந்துள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த டூவீலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றது தெரிகிறது.
இதில் மதன்குமார், சேதுராம் டூவிலர் முழுவதும் எரிந்தும், கார்த்திக்கின் டூவீலர் லேசாக தீ பற்றி எரிந்து சேதமானது.ஞானசுந்தரம் மீதும், அவரது தூண்டுதலின் பேரில் டூவீலர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதன்குமார் போலீசில் புகார் செய்தார்.
போடி டவுன் போலீசார் ஞானசுந்தர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

