/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் கெடுபிடியால் வங்கியில் பணம் பெற, செலுத்த தயக்கம்
/
தேர்தல் கெடுபிடியால் வங்கியில் பணம் பெற, செலுத்த தயக்கம்
தேர்தல் கெடுபிடியால் வங்கியில் பணம் பெற, செலுத்த தயக்கம்
தேர்தல் கெடுபிடியால் வங்கியில் பணம் பெற, செலுத்த தயக்கம்
ADDED : மார் 22, 2024 05:39 AM
ஒவ்வொரு நிதியாண்டு மார்ச் இறுதியில் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் சேகரிப்பதில் வங்கிகள் பெரும் முயற்சிகள் மேற்கொள்வது வழக்கம். ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வங்கி அதிகாரிகள் செயல்படுவார்கள். வங்கிகளில் உள்ள டெபாசிட் தொகைக்கு ஏற்ப கடன் வழங்கவும், வட்டி வழங்கிடவும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும். இந்த கால கட்டங்களில் கவர்ச்சிகரமான வட்டி வழங்கி அதிகளவில் டெபாசிட் சேகரிக்கும் பணியில் வங்கி மேலாளர்கள், பணியாளர்கள் களம் இறங்கி பணியாற்றுவர்.
லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் கெடுபிடியால் ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேல் வங்கியில் யாரும் பணம் எடுத்தாலோ, பணம் செலுத்தினாலோ, வெளிநாட்டு கரன்சியை மாற்றினாலோ மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதனால் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கூட்டுறவு, தனியார், வங்கிகளோ போட்டி போட்டுக் கொண்டு வட்டி அதிகம் தருவதாக திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஆனால் தேர்தல் விதிமுறைகளால் டெபாசிட் செய்ய வாடிக்கையாளர் முன் வருவது இல்லை.
பணம் செலுத்துவது மட்டுமின்றி எடுத்தாலும்தேர்தல் கமிஷன் அனுமதி பெற வேண்டும்.
வங்கி அதிகாரி கூறுகையில்,'தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் வங்கியில் டெபாசிட் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
டெபாசிட் சேகரிப்பதற்கு பணியாளர்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் பணப்புழக்கமும் குறைந்து உள்ளது. தேர்தல் முடிந்த பின்னரே நிலைமை சீராகும்,'என்றார்.

