ADDED : ஜூன் 27, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : கிராமப்புறத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிபண்ணை அமைக்க மாநில அரசு 50 சதவீத மானியமாக ரூ. 1.56 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இத் தொகையை கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்குதல், 4 மாதங்களுக்கு தேவையான தீவன செவிற்கு பயன்படுத்த வேண்டும். கொட்டகை அமைக்க 625 ச.அடி நிலம் இருக்க வேண்டும். இது குடியிருப்பு பகுதிகளில் இருந்து 100 மீ., துாரம் விலகி இருக்க வேண்டும். திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவை, ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயனாளிகள் அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம். அதனை ஜூலை 5க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.