ADDED : ஆக 15, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : வைகை அணையில் மீன்பிடி குத்தகை தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மீன்பிடி குத்தகைதாரிடம் கோடாங்கிபட்டியை சேர்ந்த தினகரன் 35, காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் வைகை அணை பகுதியில் தினகரன் காவலர்களுடன் ரோந்து சென்றபோது வைகை புதூரைச் சேர்ந்த பெருமாள் 37, ஆட்டோவில் 25 கிலோ திருட்டு மீன்களை கொண்டு செல்வது தெரிந்தது.
தினகரன் புகாரில் வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோவை கைப்பற்றி பெருமாள் 37,என்பவரை கைது செய்தனர். இதில் ஈடுபட்டுள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனர்.