/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி - மயிலாடும்பாறை புதிய பஸ்: மலர் துாவி வரவேற்பு
/
தேனி - மயிலாடும்பாறை புதிய பஸ்: மலர் துாவி வரவேற்பு
தேனி - மயிலாடும்பாறை புதிய பஸ்: மலர் துாவி வரவேற்பு
தேனி - மயிலாடும்பாறை புதிய பஸ்: மலர் துாவி வரவேற்பு
ADDED : ஆக 24, 2024 05:01 AM
கடமலைக்குண்டு: தேனியில் இருந்து 30 கி.மீ., தூரம் உள்ள மயிலாடும்பாறைக்கு பல ஆண்டுகளாக டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
இரு டவுன் பஸ்கள் மட்டுமே இயங்கியநிலையில் தற்போது இப்பகுதிக்கு ஆறு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
பெண்களுக்கு இலவசம் என்பதால் அதிகமான பெண்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து டவுன் பஸ்களும் பழுதடைந்து ஓட்டை உடைசலாக உள்ளது.
27 ஆண்டுகளாக இப்பகுதியில் புதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தேனி -மயிலாடும்பாறை வழித்தடத்தில் புதிய அரசு டவுன் பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது. தேனியில் இருந்து கொடுவிலார்பட்டி, அம்பாசமுத்திரம், கண்டமனூர், கடமலைக்குண்டு வழியாக மயிலாடும்பாறைக்கு இயக்கப்பட்ட புதிய பஸ்சிற்கு கண்டமனூர் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்து, பயணிகளுக்குஇனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். மலைப்பகுதி கிராமங்களை உள்ளடக்கிய இந்த வழித்தடத்தில் அனைத்து பஸ்களையும் புதிய பஸ்களாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

