/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
மாவட்ட சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 28, 2024 12:17 AM

உத்தமபாளையம்: தேனி மாவட்ட சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் உத்தமபாளையத்தில் இருநாட்கள் நடைபெற்றது.
உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சாரண , சாரணிய ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமை மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் தலைமை வகித்து சாரண, சாரணியர் கொடியேற்றி வைத்தார். விகாசா மெட்ரிக் பள்ளி தாளாளர் இந்திரா முன்னிலை வகித்தார். இரண்டு நாள் பயிற்சியில் முதலுதவி செய்வது, உடனடியாக செயலாற்றவது எப்படி, நிலைமைக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்படும் விதம், பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.
விகாசா பள்ளிக்கான சாரட்டர் சான்றிதழை சாரண ஆசிரியர் கார்த்திக் கண்ணன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாக குழு தலைவர் உதயகுமார், பள்ளியின் முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூரத்தி, சாரணிய இயக்க மாவட்ட செயலாளர் பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.