ADDED : மார் 28, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் இளம் வாக்காளர்களின் பங்கு, வாக்களிப்பதன் முக்கியத்துவம், ஒரு ஓட்டால் ஆட்சியை மாற்றலாம் என்பதற்கான விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டி நடந்தது.
கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் தமிழ்மாறன், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குபேர ராஜா முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.