/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு
/
25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : மார் 09, 2025 05:07 AM

தேனி : மாவட்டத்தில் 25 இடங்களில் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இப்பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வனத்துறை அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நீர்நிலைகள், ஈரநிலப்பகுதி, நிலப்பகுதியில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். மாவட்டத்தில் இன்று காலை 6:30 மணி முதல் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதற்காக 25 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்மாயிலும் ஒரு வனத்துறை அலுவலர் தலைமையில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவை வழிநடத்த உள்ள வனத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட வன அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமை வகித்தார். பறவைகளின் வகைகளை எவ்வாறு கண்டறிவது, சில பறவைகளின் சிறப்புகள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது. மேலும் நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிபற்றியும் விவரிக்கப்பட்டது.