/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பீரோவை திறந்து பணம் நகை திருடிய பெண் கைது
/
பீரோவை திறந்து பணம் நகை திருடிய பெண் கைது
ADDED : மே 24, 2024 03:18 AM
தேவதானப்பட்டி: அடுத்தவர் வீட்டு பீரோவை திறந்து ரூ. 1.60 லட்சம் மற்றும் தங்க மாட்டலை திருடிய பெண்ணை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முருகாண்டி மனைவி சுப்பம்மாள் 40. அதே பகுதியைச் சேர்ந்த இவரது அக்கா மகள் காமுத்தாய் 27. இவரது வீட்டில் பணம் வைக்க பாதுகாப்பு இல்லாததால், தனது சித்தியிடம் ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்து வைத்திருந்தார். இந்தப் பணத்தையும், சுப்பம்மாள் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தையும் சேர்த்து, மொத்தம் ரூ.1.60 லட்சம் மற்றும் சுப்பம்மாள் 4 கிராம் தங்க மாட்டல் (ஒரு ஜோடி) பீரோவில் பூட்டி வைத்திருந்தார். சுப்பம்மாள், காமுத்தாய் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த விஜயா 35. சில தினங்களுக்கு முன்பு சுப்பம்மாள் வீட்டு பீரோவை திறந்து ரூ.1.60 லட்சம், 4 கிராம் தங்க மாட்டலை திருடி சென்றார். பீரோவில் நகை,பணம் திருடுபோனது சம்பந்தமாக சுப்பம்மாள் சந்தேகப்பட்டு கேட்டதில், திருடியதை விஜயா ஒப்புக்கொண்டார். 15 நாட்களில் திரும்ப கொடுப்பதாக விஜயா கால அவகாசம் கேட்டார். திருப்பி தராததால் தேவதானப்பட்டி எஸ்.ஐ., தேவராஜ், விஜயாவை கைது செய்தார்.-